Description
ஒரு நீண்ட, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ஜப்பானிய இரகசியத்தைத் திரை விலக்கும் ஓர் அருமையான நூல்! எல்லோருக்கும் ஓர் இக்கிகய் இருக்கிறது, அதாவது, தினமும் காலையில் படுக்கையைவிட்டு உற்சாகமாகத் துள்ளியெழுவதற்கான ஒரு காரணம் இருக்கிறது, என்று ஜப்பானியர்கள் நம்புகின்றனர். உத்வேகம் மற்றும் ஊக்கத்தின் ஊற்றாகத் திகழ்கின்ற இந்நூல், உங்களுடைய தனிப்பட்ட இக்கிகய்யைத் திரை விலக்குவதற்கான கருவிகளை உங்களுக்கு வழங்கும். உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய வல்லமை வாய்ந்தவை அவை. அவசரப் போக்கைக் கைவிட்டுவிட்டு, உங்கள் வாழ்வின் நோக்கத்தைக் கண்டறிந்து, உங்களுடைய நட்புகளை வளர்த்தெடுத்து, உங்கள் ஆழ்விருப்பங்களுக்கு உங்களை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்வது எப்படி என்பதை இந்நூல் உங்களுக்கு விளக்கிக் காட்டும். இக்கிகய்யின் துணையுடன் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தத்தையும் ஆனந்தத்தையும் கொண்டு வாருங்கள்.
Reviews
There are no reviews yet.